உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துார் கோயில் வளாகத்தில் கட்டுமான பொருளால் பாதிப்பு

திருப்புத்துார் கோயில் வளாகத்தில் கட்டுமான பொருளால் பாதிப்பு

திருப்புத்துார் : திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயில் பூச்சொரிதல் விழா, வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத்துறையை பக்தர்கள் கோரியுள்ளனர்.இக்கோயிலில் சித்திரைத் திருவிழாவாக பூச்சொரிதல் விழா, வசந்தப்பெருவிழா நடைபெறும். பூச்சொரிதல் விழா ஏப்.,28 ல் நடைபெறும். தொடர்ந்து மறுநாள் காலை காப்பு கட்டி வசந்தப்பெருவிழா துவங்கி 10 நாட்கள் நடைபெறும். இந்நிலையில் கோயில் வெளி வளாகத்தில் விநாயகர் கோயில் அருகில் அறநிலையத்துறை சார்பில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிவடையாமல் வளாகம் முழுவதும், மணல்,கல் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் நடமாட்டத்திற்கு இடையூறாக உள்ளது. விழா துவங்கும் முன் ஏற்பாடுகளுக்கு சிரமத்தை தரும். எனவே கட்டுமானப்பணிகளை விரைந்து முடிக்க அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி