உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேலடிமடை கிராமத்தில் வீடுகளில் மின்சாதனம் சேதம்

வேலடிமடை கிராமத்தில் வீடுகளில் மின்சாதனம் சேதம்

இளையான்குடி: இளையான்குடி அருகே வேலடிமடை பகுதியில் அடிக்கடி ஏற்படும் உயரழுத்த மின் சப்ளையால், மின்சாதனங்கள் சேதமாவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இளையான்குடி அருகே வேலடிமடை, கீழநெட்டூர், ஆலம்பச்சேரி உள்ளிட்ட கிராமங்களுக்கு வேலடிமடையில் உள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின்வினியோகம் நடக்கிறது. மழை காலத்தில் டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டு அடிக்கடி உயர் அழுத்த மின்சப்ளை நடக்கிறது. இதனால், இக்கிராமப்புற வீடுகளில் உள்ள மின்சாதன பொருட்கள் சேதமடைந்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். நேற்று மழை பெய்த போது உயர் அழுத்த மின்சப்ளை ஏற்பட்டதால்,வேலடி மடையில் 15 க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள ஏ.சி., பிரிட்ஜ், வாசிங் மெஷின், டி.வி., உள்ளிட்ட மின்சாதனங்கள் பழுதடைந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை