உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை புத்தக திருவிழா மேடையில் டான்ஸர் பலி

சிவகங்கை புத்தக திருவிழா மேடையில் டான்ஸர் பலி

சிவகங்கை : சிவகங்கையில் நடக்கும் புத்தக திருவிழாவில் நடனமாடிய நடனக்கலைஞர் திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.சிவகங்கை, மன்னர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா, பிப்., 21-ல் தொடங்கி நடந்து வருகிறது.தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தினமும் காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை பள்ளி, கல்லுாரி மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நடன கலைஞரும், நடன ஆசிரியருமான சிவகங்கை, அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணன், 55, நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேடையில் மயங்கி விழுந்தார்.விழாக்குழுவினர், அவரை சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை