உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெல் கொள்முதல் மையங்களில் எடைபோடுவதில்  தாமதம்

நெல் கொள்முதல் மையங்களில் எடைபோடுவதில்  தாமதம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் மையங்களில் எடைபோடுவதில் தாமதம்ஏற்படுவதால் நெல் மூடைகள் சேதமடைந்து வீணாவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவ மழை மூலம் அக்.முதல் டிச., வரை நல்ல மழை பெய்தது. ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு கண்மாய்கள் நிரம்பின.விவசாயிகள் அறுவடைசெய்த நெல்லை கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 80 கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டு, தற்போது வரை 50க்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்கி வருகின்றனர்.இந்த நெல்லை வழங்கும் விவசாயிகளுக்கு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் நெல்லுக்கான தொகை வழங்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள சில நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்கி எடைபோடுவதில் தாமதிப்பதாக புகார் உள்ளது. நாடமங்கலம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் வாங்கிய நெல்லை எடை போடுவதில் தாமதிப்பதாகவும்,வாங்கப்பட்ட நெல் மூடைகளை முறையாக பாதுகாக்காமல் மூடைகள் சேதம் அடைந்து ஆடு, மாடுகளுக்கு இரையாகிறது என்ற புகார் எழுந்துள்ளது. மாவட்ட முழுவதும் கடந்த இரண்டு தினங்களாக மழை பெய்து வருவதால் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் சேகரிக்கப்படும் நெல் மூடைகளை முறையாக பாதுகாத்து எடைபோட்டு விவசாயிகளுக்கான தொகையை முறையாக வழங்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !