உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எஸ்.புதுாரில் பா.ஜ., டூவீலர் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு

எஸ்.புதுாரில் பா.ஜ., டூவீலர் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு

எஸ்.புதுார் : எஸ்.புதுாரில் பா.ஜ., டூவீலர் ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கட்சியினர் ஏழு மணி நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.சிவகங்கை லோக்சபா தொகுதி பா.ஜ. கூட்டணி வேட்பாளர் தேவநாதனுக்கு ஆதரவு திரட்ட எஸ்.புதுார் ஒன்றியத்தில் டூவீலர் ஊர்வலத்திற்கு கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். நேற்று காலை 9:00 மணிக்கு பிரான்பட்டியில் 100க்கும் மேற்பட்ட டூவீலர்களில் கட்சி கொடியுடன் நிர்வாகிகள், தொண்டர்கள் கூடினர். ஊர்வலத்தில் பங்கேற்க வேட்பாளரின் மகள் ஹரிணியும் வந்திருந்தார்.தேர்தல் பார்வையாளரிடம் அனுமதி வாங்கப்படவில்லை எனக் கூறி ஊர்வலத்திற்கு போலீசார் தடை விதித்தனர். பொறுப்பாளர்கள் திருப்புத்துார் சட்டசபை தொகுதி பார்வையாளருக்கு பதிலாக, சிவகங்கை பார்வையாளருக்கு, அதுவும் 15 ம் தேதிக்கு விண்ணப்பித்து இருந்தது அப்போது தான் தெரிந்தது.பின்னர் ஒரு வழியாக திருப்புத்துார் பார்வையாளரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. டூவீலர் ஊர்வலத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்கவில்லை என்பதால் அதிகாரிகள் அனுமதி தர மறுத்துவிட்டனர். அதற்கு பதிலாக மாலை 5:00 மணிக்கு அந்தந்த பகுதிகளில் நடந்து சென்று ஓட்டு சேகரிக்க அனுமதித்தனர். இதை தொடர்ந்து 7 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு கட்சியினர் டூவீலர்களில் கட்டியிருந்த கொடிகளை அகற்றிவிட்டு கலைந்து சென்று அவரவர் ஏரியாவில் நடந்து சென்று ஓட்டு சேகரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ