உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மடப்புரத்திற்கு காவடி சுமந்து வந்த பக்தர்கள்

மடப்புரத்திற்கு காவடி சுமந்து வந்த பக்தர்கள்

திருப்புவனம், : ஆடி இரண்டாவது வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தேவகோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் காவடி எடுத்து வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உச்சி கால பூஜை விநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் தொடங்கி அடைக்கலம் காத்த அய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்த பின் மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு ஐந்து வித தீபாராதனை காட்டப்பட்டது. உச்சி கால பூஜைக்கு பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்திருந்தனர். தீபாராதனை காட்டப்பட்ட பின் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன், எஸ்.ஐ.,மோகன்தாஸ் தலைமையில் போலீசார் வாகனங்களை ஒழுங்கு படுத்தினர். தரிசனம் செய்ய வந்த பக்தர்களும், தரிசனம் முடிந்து வெளியேறிய பக்தர்களும் சிரமமின்றி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ