உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆனி வெள்ளியில் மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்

ஆனி வெள்ளியில் மடப்புரத்தில் குவிந்த பக்தர்கள்

திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஆனி முதல் வெள்ளி பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு வெள்ளி, செவ்வாய், ஞாயிறன்று பெண் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.பவுர்ணமி காலங்களில் மதியம் ஒரு மணி உச்சிக்கால பூஜையில் பங்கேற்க பக்தர்கள் திரள்வது வழக்கம். நேற்று ஆனி முதல் பவுர்ணமி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு உச்சி கால பூஜையில் பங்கேற்பதற்காக பெண்கள் காலை முதலே காத்து கிடந்தனர். அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதியம் ஒரு மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது.செயல் அலுவலர் ஞானசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்திருந்ததால் பக்தர்கள் சிரமமின்றி ம்மனை தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி