உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மேலநெட்டூர் கோயிலில் ஆனி தேரோட்டம் பக்தர்கள் பங்கேற்பு

மேலநெட்டூர் கோயிலில் ஆனி தேரோட்டம் பக்தர்கள் பங்கேற்பு

மானாமதுரை: மேலநெட்டூர் சொர்ணவாரீஸ்வரர் சாந்தநாயகி அம்மன் கோயில் ஆனித் திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.10 நாட்கள் நடைபெறும் விழாவின் போது சுவாமி பல்வேறு வாகனங்களில் அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று சொர்ணவாரீஸ்வரர் சுவாமிதேரோட்டத்திற்காக பெரிய தேரில் எழுந்தருளினார்.சிறிய தேரில் சாந்தநாயகி அம்மனும் முன்பு விநாயகர் மற்றும் முருகன் சுவாமி எழுந்தருளிய பிறகு மாலை 4:30 மணிக்கு தேர் நிலையிலிருந்து கிளம்பி நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வந்தது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி