உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வயிற்றுபோக்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்  

வயிற்றுபோக்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்  

சிவகங்கை : அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் ஜூலை 1 முதல் ஆக.,31 வரை வயிற்று போக்கை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: இம்மாவட்டத்தில் வயிற்று போக்கினால் ஏற்படும் குழந்தைகளின் இறப்பை தடுக்க, வயிற்று போக்கை கட்டுப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் அனைத்து அங்கன்வாடி, துணை சுகாதார, ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் ஜூலை 1 முதல் ஆக., 31 வரை நடைபெற உள்ளது.இதற்காக வயது 5க்கு உட்பட்ட குழந்தைகளின் வீடுகளுக்கு ஓ.ஆர்.எஸ்., பாக்கெட் வழங்கப்படும். மேலும் தாய்ப்பாலின் மேன்மை, ஓ.ஆர்.எஸ்., கரைசல் தயாரிக்கும் முறை, துத்தநாக மாத்திரை வழங்கும் முறை குறித்து விழிப்புணர்வு வழங்குவர். இம்முகாம் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 600 குழந்தைகளுக்கு முன் எச்சரிக்கையாக 2 ஓ.ஆர்.எஸ்., பாக்கெட்கள், 14 துத்தநாக மாத்திரைகள் வழங்கப்படும். இந்த வாய்ப்பை குழந்தைகளின் பெற்றோர் பெற்று பயன்பெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்