உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அகழாய்வில் சுடுமண் அணிகலன் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் சுடுமண் அணிகலன் கண்டெடுப்பு

கீழடி:கீழடி, 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண்ணால் செய்யப்பட்ட பண்டைய கால அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள், கீழடி பிரிவு இயக்குனர் ரமேஷ், இணை இயக்குனர் அஜய் தலைமையில் தொல்லியல் துறை மாணவர்கள், தொழிலாளர்களுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மூன்று குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அகழாய்வில் பாசிகள், கண்ணாடி மணிகள், தமிழி எழுத்து பானை ஓடு, மீன் உருவ பானை ஓடுகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அகழாய்வில் பண்டைய கால மக்கள் அணியும் அணிகலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கீழ்ப்பகுதி, 2.5 செ.மீ., விட்டமும் மேல் பகுதி 1.5 செ.மீ., விட்டமும் கொண்டதாக உள்ளது.பக்கவாட்டில் நுால் அல்லது நார் கோர்த்து அணிவதற்கு வசதியாக ஒரே நேர்க்கோட்டில் ஆன துளை அமைக்கப்பட்டு உள்ளது. செப்டம்பரில் அகழாய்வு நிறைவடைய உள்ள நிலையில், பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை