உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விவசாயிகளை அச்சுறுத்தும் மின்கம்பம்

விவசாயிகளை அச்சுறுத்தும் மின்கம்பம்

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம் அப்பகுதி விவசாயிகளை அச்சுறுத்தி வருகிறது.இவ்வொன்றியத்தில் சதுர்வேதமங்கலம் கிராமத்தில் பாலாற்றங்கரை அருகே உள்ள ஒரு மின்கம்பம் சில ஆண்டுகளுக்கு முன்பு காற்றில் சாய்ந்தது.இன்றுவரை சரிசெய்யப்படாமல் அப்படியே ஆபத்தான முறையில் தொங்குகிறது. இதனால் மின்கம்பிகள் கைக்கு எட்டும் துாரத்தில் செல்கிறது. காற்று, மழைக்கு எப்போது வேண்டுமானாலும் மின்கம்பம் விழுந்து அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் விவசாயிகளும், கால்நடைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே சாய்வாக உள்ள மின்கம்பத்தை மின்வாரிய அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை