உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை மெயின் ரோட்டில் டிராக்டரில் பயணிக்கும் மின் கம்பம்

மானாமதுரை மெயின் ரோட்டில் டிராக்டரில் பயணிக்கும் மின் கம்பம்

மானாமதுரை : மானாமதுரை ஊரக மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதிதாக மின் கம்பங்கள் அமைப்பதற்காக மெயின் ரோடுகளில் டிராக்டர்களில் ஆபத்தான முறையில் மின்கம்பங்களை கொண்டு செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் கட்டப்படும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு புதிதாக மின் இணைப்பு வழங்குவதற்காக ஆங்காங்கே மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.மேலும் சேதமடைந்த மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.மானாமதுரை சிப்காட் அருகே உள்ள மின்வாரிய அலுவலகத்திலிருந்து கம்பங்களை மானாமதுரை நகர் பகுதி மெயின் ரோடு வழியாக டிராக்டர்களில் ஆபத்தான முறையில் கொண்டு செல்வதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துக்குள்ளாகி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பங்களை உரிய பாதுகாப்போடு டிராக்டர்களில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை