உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காயாங்கண்மாய் துார்வார வலியுறுத்தல்

காயாங்கண்மாய் துார்வார வலியுறுத்தல்

திருப்புத்துார் : திருப்புத்தூர் அருகே ரணசிங்கபுரத்தில் உள்ள காயாங்கண்மாயை துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.இங்குள்ள கண்மாயை நம்பி விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது இக்கண்மாய் துார்வாரப்படாமல், புதர்கள் மண்டிக்கிடக்கின்றன. இதனால் மழை நீர் சேகரமாகவில்லை. குடியிருப்பு பகுதி ஆழ்குழாய் கிணறுகளுக்கு அதிக நீர்வரத்து தரும், கண்மாயாக உள்ளதால், இக்கண்மாயை துார்வாரி, வரத்து கால்வாய்களை செப்பனிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து சோமசுந்தரம் கூறியதாவது: குடியிருப்பை ஒட்டியுள்ள கண்மாயாக இருப்பதால், பாதுகாப்பு கருதி, துார்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். கரையில் நடைபயிற்சி மேற்கொள்ள பேவர் பிளாக் சாலை, பூங்கா போன்றவை அமைக்க வேண்டும். ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இக்கண்மாயை செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை