உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் 

சுற்றுச்சூழல் தின விழிப்புணர்வு ஊர்வலம் 

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார்துவக்கி வைத்தார். மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பாண்டியராஜன் தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். பசுமை தோழர் அபிநயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மஞ்சள் பை பயன்படுத்த வேண்டும், பாலிதீன்பை பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் திருப்புத்துார்ரோடு வழியாக அரசு மகளிர் மேல்நிலை பள்ளி வரை சென்றது. மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாணவர்களுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ