உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராவல் மண் தட்டுப்பாட்டால் புதிய ரோடுகள் அரிப்பு

கிராவல் மண் தட்டுப்பாட்டால் புதிய ரோடுகள் அரிப்பு

திருப்புத்துார், : புதிதாக அமைக்கப்படும் ரோட்டோரத்தில் மண் அரிப்பை தவிர்க்க கிராவலுக்கு பதிலாக புற்கள், குத்துச்செடிகள் வளர்க்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரியுள்ளனர்.புதிய ரோடுகள் அமைக்கப்படும் போது ரோட்டோரங்களில் மண் அரிப்பை தடுக்க செம்மண்,சரளை போன்ற கிராவல் மண் போடுவது வழக்கம். 10 செமீ உயரம், ஒரு மீட்டர் அகலத்தில் இந்த கிராவல் மண் போடப்படுவது வழக்கமாக இருந்தது. தற்போது கிராவல் குவாரி அனுமதி கடினமாகி விட்டதால் கிராவல் மண் தட்டுப்பாடு உள்ளது. தற்போது நெடுஞ்சாலைத்துறையினரால் போடப்படும் ரோடுகளுக்கு முறைப்படி இருபுறமும் கிராவல் மண் போடப்படுவதில்லை.மாற்றாக அருகிலுள்ள கண்மாய்பகுதி மண்ணை அணைத்துப் போடுகின்றனர். இதனால் உயரமான பகுதிகள், நீர்நிலை அருகிலுள்ள ரோடுகளில் மழை பெய்யும் போது மண் அரிப்பு ஏற்பட்டும், மண் சரிந்தும் ரோடு எளிதாக சேதமடைந்து விடுகிறது. இதனைத் தவிர்க்க மாற்று வழிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கோரியுள்ளனர். மண் போட்டு அதனை நீர் விட்டு ரோலர் மூலம் அழுத்த கோரியுள்ளனர். மேலும் மண் அரிப்பு ஏற்படும் இடங்களில் இயற்கையான புற்கள், புதர் செடிகள் போன்றவற்றை நடவு செய்யவும் கோரியுள்ளனர்.திருப்புத்துார் அருகே ரணசிங்கபுரம் - சிவகங்கை ரோடு இணைப்பு ரோட்டில் மண் அரிப்பை தடுத்து கற்றாழை குத்துச் செடிகள் பாதுகாக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் மண் அரிப்பை தடுக்க மாற்று வழி காணவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை