உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை வயல்களில் புலிக்குளம் மாடுகள் கிடை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம்

மானாமதுரை வயல்களில் புலிக்குளம் மாடுகள் கிடை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம்

மானாமதுரை, : மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளிலுள்ள வயல்களில் இயற்கை உரத்திற்காக நாட்டின மாடுகளை அடைத்து கிடை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.மானாமதுரை அருகே உள்ள புலிக்குளம் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட புலிக்குளம் நாட்டின மாடுகள் தமிழகம் முழுவதும் கிடை மாடுகளாக அழைத்துச் செல்லப்பட்டு வயல்களில் கிடை அமைக்கப்படுகிறது. இந்த மாடுகளின் சாணம்,சிறுநீர் ஆகியவை வயல்களுக்கு அனைத்து சத்துக்களையும் கொடுக்கக்கூடிய இயற்கை உரமாக இருப்பதால் இந்த மாடுகளை கிடை அமைப்பதில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் நெல் அறுவடை முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகி விட்டதாலும், தற்போது கோடை மழை அனைத்து பகுதிகளிலும் பெய்ததை தொடர்ந்து வயல்கள் ஈரப்பதத்துடன் இருப்பதால் தற்போது நாட்டின மாடுகளை கிடை அமைத்தால் அவற்றின் சாணம் மற்றும் சிறுநீர் வயல்வெளிகளுக்கு அனைத்து சத்துக்களையும் கொடுக்கக்கூடிய இயற்கை உரமாக இருப்பதால் புலிக்குளம் நாட்டு மாடுகள் கிடை அமைப்பவர்களை விவசாயிகள் தேடிச்சென்று தங்களது வயல்களில் கிடை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்