| ADDED : ஜூலை 15, 2024 04:18 AM
காரைக்குடி, : கானாடுகாத்தானின் வீடுகளை முற்றுகையிட்டு அச்சுறுத்தும் குரங்குகளை பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா நகரமாக செட்டிநாடு விளங்குகிறது. காண்போரை வியக்க வைக்கும் பங்களாக்கள், கோயில்கள், சாலைகள், கட்டிடக் கலைக்கு சான்றாக உள்ளது. உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் கானாடுகாத்தான், ஆத்தங்குடி, பள்ளத்தூர் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர்.கானாடுகாத்தான் பேரூராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இப்பகுதியில் உள்ள தெருக்களில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. தவிர, வீடுகள் கடைகளில் உணவுப் பொருட்களை குரங்குகள் தூக்கி செல்கின்றன. மேலும், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளையும் சாலையில் நடந்து செல்லும் பொது மக்களையும் குரங்குகள் அச்சுறுதத்துகின்றன. கூட்டமாக சுற்றி தெரியும் குரங்குகள் வீடுகளை முற்றுகையிடுவதால் பொதுமக்கள் வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். எனவே குரங்குகளை அப்புறப்படுத்தி வனப்பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.