உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதுவயலில் தீயணைப்பு நிலையம்

புதுவயலில் தீயணைப்பு நிலையம்

காரைக்குடி, : புதுவயலில் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை மக்கள் வரவேற்றுள்ளனர்.புதுவயல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அரிசி ஆலைகள் பல உள்ளன. அரிசி ஆலைகள் மற்றும் நெல் கோடவுன்களில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்க காரைக்குடி தீயணைப்பு நிலையத்திலிருந்து தீயணைப்பு வாகனம் வர வேண்டி உள்ளது. 15 கிலோமீட்டர் தொலைவிலிருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் மொத்த பொருட்களும் எரிந்து வீணாகிறது. புதுவயல் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து சட்டமன்ற கூட்டத் தொடரிலும் காரைக்குடி எம்.எல்,ஏ., மாங்குடி கோரிக்கை விடுத்தார். சட்டமன்ற கூட்டத்தொடரில் புதுவயலில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைய உள்ளதாக அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ