| ADDED : மே 10, 2024 11:12 PM
சிவகங்கை : இளநிலைப் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் விண்ணப்பிக்க சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லுாரியில் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் 2024-25 ம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasa.inஎன்னும் இணைய தள முகவரியில் மே 6 முதல் பதிவு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர் சேர்க்கைக்கான இணையதளப் பதிவு நடைபெறுகிறது. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் விண்ணப்பங்களை இணைய தளத்தில் பதிவு செய்ய கல்லுாரியின் கனினி ஆய்வகத்தில் இலவச சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.மாணவர்கள் இந்த இலவச சேவை மையத்தை அணுகி தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்.சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் பி.ஏ.தமிழ், வரலாறு தமிழ் வழி, பொருளியல் தமிழ்வழி, ஆங்கில வழியில் பி.காம்., வணிகவியல், பி.எஸ்.சி., கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், கணினி அறிவியல் ஆகியப் பாடப்பிரிவுகள் காலை, மாலை என இரண்டு சுழற்சிகளிலும் உள்ளன.பி.ஏ. ஆங்கிலம், பி.பி.ஏ., வணிக நிர்வாகவியல், பி.எஸ்.சி., தாவரவியல் ஆகிய படிப்புகள் காலையில் மட்டும் உள்ளன.இப்படிப்புகளுக்கு இணைய வழியில் விண்ணப்பிக்க இறுதி நாள் மே 20. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.இதர வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48. அனைத்துப் பிரிவினரும் பதிவுக் கட்டணமாக ரூ.2 கட்ட வேண்டும்.விண்ணப்பத்திற்கான கட்டணத்தை இணைய வழியிலேயே கட்ட வேண்டும் என அரசு அறிவித்தியுள்ளது.