விளையாட்டு திடல் மீட்பு
தேவகோட்டை, : தேவகோட்டை அருகே புதுக்குடியிருப்பு கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். 2000ல் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விளையாட்டு திடல் அமைக்கப்பட்டது. கொரோனா காலத்தில் பயன்படுத்தாமல் இருந்தனர். இந் நிலையில் தனி நபர் ஒருவர் விறகுகளை குவித்து ஆக்கிரமித்துள்ளார். தற்போது கிராமத்து இளைஞர்கள் மீண்டும் விளையாட வந்த போது அந்த நபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிராமத்தினர் ஊராட்சி தலைவரிடம் முறையிட்டனர். மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்யப்பட்டது.மாவட்ட நிர்வாகம் மீண்டும் விளையாட்டு திடலாக பயன்படுத்துமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று கிராமத்தினர் போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று இடத்தை சுத்தம் செய்து மீட்டு மீண்டும் விளையாட்டு திடலை உருவாக்கினர்.