உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் நாளை விநாயகர் ஊர்வலம்

சிங்கம்புணரியில் நாளை விநாயகர் ஊர்வலம்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசித் திருவிழா நாளை (மே 2) விநாயகர் ஊர்வலத்துடன் துவங்குகிறது. சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட இக்கோயில் வைகாசி விசாக திருவிழா 20 நாட்கள் நடக்கும். விழாவையொட்டி நாளை இரவு 8:00 மணிக்கு கோயிலிலுள்ள உற்ஸவ விநாயகர் சப்பரத்தில் ஊர்வலமாக புறப்பட்டு கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளுகிறார். அங்கு 10 நாட்கள் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும்.தொடர்ந்து மே 12ம் தேதி விநாயகர் மீண்டும் கோயிலுக்கு திரும்புவார். அன்று காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கும்.பத்து நாள் மண்டகப்படியாக தினமும் சாமி வீதிவுலா நடக்கிறது. மே 16ல் திருக்கல்யாணம், மே 17 ல் கழுவன் திருவிழா, மே 20ல் தேரோட்டம், மே 21ல் பூப்பல்லக்கு உற்ஸவம் நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தானம், கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ