உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குரூப் 4 தேர்வு மையம் ஆய்வு

குரூப் 4 தேர்வு மையம் ஆய்வு

திருப்புவனம் : திருப்புவனம் தாலுகாவில் குரூப் 4 தேர்வு நடைபெறும் மையங்களில் உள்ள வசதி குறித்து தாசில்தார் விஜயகுமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருப்புவனம் தாலுகாவில் கடந்தாண்டு பூவந்தி, மடப்புரம், பொட்டப்பாளையம் உள்ளிட்ட 15 மையங்களில் நான்காயிரத்து 850 பேர் தேர்வு எழுதினர். இந்தாண்டு ஜூன் 9ம் தேதி தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு பணிகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.இதனையொட்டி திருப்புவனம் பகுதியில் உள்ள மையங்களில் கழிப்பறை, பேன், குடிநீர் வசதி, கேள்வித்தாள் வைக்க பாதுகாப்பு வசதி, தேர்வாளர்கள் வந்து செல்ல உரிய வசதி குறித்து தாசில்தார் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் தங்கப்பாண்டியன் ஆய்வு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை