உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டில் கிடந்த நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

ரோட்டில் கிடந்த நகை உரிமையாளரிடம் ஒப்படைப்பு

திருப்புத்துார்:திருப்புத்துாரில் பொதுமக்கள் ஒப்படைத்த ரோட்டில் கிடந்த நகையை போலீசார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். காரைக்குடி ரோட்டில் வாரச்சந்தை அருகில் ஜூன் 12ல், டூவீலரில் சென்ற விக்னேஷ் மற்றும் சீனிவாசன் இருவரும் கீழே கிடந்த நகையை எடுத்து போலீசில்ஒப்படைத்தனர்.போலீஸ் எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் நகையில் இருந்த நகைக்கடை அடையாளத்தை வைத்து நகைக் கடையில் நகை உரிமையாளர் குறித்து விசாரித்தார். காரைக்குடி பர்மா காலனியைச் சேர்ந்த அயுப்கான் மனைவி நிலோபர் நிஷா தொலைந்த நகை தனக்கு சொந்தமானது என்று போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் உரிய ஆவணங்கள் அடிப்படையில் அதை உறுதி செய்தனர். பின்னர் நகை உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.ரூ 2 லட்சம் மதிப்புள்ள நகையை போலீசாரிடம் ஒப்படைத்த விக்னேஷ் மற்றும் சீனிவாசன் ஆகியோரை போலீசார், பொதுமக்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்