உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குதிரை எடுப்பு விழா

குதிரை எடுப்பு விழா

பழையனுார்: பழையனுார் அருகே மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. ஓடாத்துார் சிவ செண்பக தண்ணாயிரமுடைய அய்யனார் கோயிலில் வருடம் தோறும் வைகாசியில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி குதிரை எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.வேளார் தெருவில் குதிரைகளுக்கு சிறப்பு பூஜை செய்து தீபாராதனை காட்டிய பின் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி இளைஞர்கள் புரவிகளை சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த பெண்கள் குழந்தை பொம்மைகளை சுமந்தபடி வந்தனர். அய்யனார் கோவில் வாசலுக்கு வந்த பின் சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ