உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளைவயல் காளியம்மன் கோயில்  பூச்சொரிதல் விழா துவக்கம்

பிள்ளைவயல் காளியம்மன் கோயில்  பூச்சொரிதல் விழா துவக்கம்

சிவகங்கை: சிவகங்கையில் பிரசித்தி பெற்ற பிள்ளைவயல் காளியம்மன் கோயில், பூச்சொரிதல் விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனி மாதம் 8 நாட்கள் பூச்சொரிதல் விழா நடக்கும். இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று காலை 9:15 முதல் 10:15 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கியது.நேற்று மாலை 6:00 மணிக்கு அம்மன் சன்னதி முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. தினமும் காலை, மாலை பிள்ளைவயல் காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். ஜூலை 12 ம் தேதி காலை 5:00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிேஷகம் நடைபெறும். சந்தன காப்பு அலங்காரத்தில் குழந்தையுடன் பிள்ளைவயல் காளி எழுந்தருள்வார்.அன்று காலை முதல் இரவு வரை நகரில் உள்ள பெண்கள் பூத்தட்டுக்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு அபிேஷகம் செய்வர்.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் நாராயணி செய்து வருகிறார். கோயில் பூஜாரி சங்குமணிகண்டன் பூஜையை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி