உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுதந்திர தின விழா முன்னேற்பாடு 

சுதந்திர தின விழா முன்னேற்பாடு 

சிவகங்கை, - சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ., (பொது) முத்துக்கழுவன், கோட்டாட்சியர்கள் சிவகங்கை விஜயகுமார், தேவகோட்டை பால்துரை, டி.எஸ்.பி., சிபி சாய் சவுந்தர்யன், மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன், கலெக்டர் பி.ஏ., (வளர்ச்சி) கண்காணிப்பாளர் பத்மநாபன், மருத்துவமனை நிலைய அலுவலர் மகேந்திரன், இணை இயக்குனர் (மருத்துவம்) பிரியதர்ஷினி, முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார் பங்கேற்றனர். சுதந்திர தின விழா ஏற்பாடுகளை செய்வது குறித்து கலந்து ஆலோசனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ