உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வட்டியில்லா வங்கி கடன் வாங்கி தருவதாக மோசடி: தம்பதி கைது

வட்டியில்லா வங்கி கடன் வாங்கி தருவதாக மோசடி: தம்பதி கைது

நாச்சியாபுரம்:திருப்புத்துார் அருகே கள்ளிப்பட்டில் வங்கியில் வட்டியில்லா கடன் வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்ற கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே கள்ளிப்பட்டுக் கிராமத்தில் நேற்று தம்பதியாய் வந்த இருவர், 'தாங்கள் கல்லல் தனியார் வங்கியைச் சேர்ந்தவர்கள். எங்களிடம், 1,000 கொடுத்தால், 1 லட்சம் ரூபாய் வட்டியில்லாக் கடன் வாங்கித் தருவோம்' என, அங்குள்ளவர்களிடம் கூறியுள்ளனர்.மக்களிடம் மொபைல் போனில் இணைப்பு கொடுத்து, அதில் ஒருமுறை பாஸ்வேர்டு மூலம் அதற்கு உறுதியளித்துள்ளனர். பலரிடம் பணமும் வாங்கிய நிலையில் சந்தேகமடைந்த சிலர் கல்லல் தனியார் வங்கிக்கு தந்தனர்.சம்பந்தப்பட்ட கிளை மேலாளர் கள்ளிப்பட்டிற்கு வந்து அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் போலியான அடையாள அட்டை வைத்து வங்கியின் பெயரால் ஏமாற்ற திட்டமிட்டது தெரிய வந்தது.நாச்சியாபுரம் போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கையில், இருவரும் புதுக்கோட்டை புலிச்சன்காட்டை சேர்ந்த செல்லம் மகன் மணிகண்டன், 28, மற்றும் ராமர் மகள் சித்ராதேவி, 26, என்பதும், கணவன், மனைவியான இவர்கள், தற்போது மதுரை கே.புதுார் மாதாகோவில் தெருவில் வசிப்பதும் தெரியவந்துள்ளது.இவர்கள் வங்கியின் பெயரால் வட்டியில்லா கடன் தருவதாகக் கூறி தஞ்சாவூரில் பலரை ஏமாற்றியுள்ளதும் தெரிந்தது. மேல்விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ