உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆடி பிறப்பை யொட்டி கால்நடைகள் வாங்க ஆர்வம்

ஆடி பிறப்பை யொட்டி கால்நடைகள் வாங்க ஆர்வம்

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று நடந்த கால்நடை சந்தையில் விவசாயிகள் பலரும் ஆடு, கோழி, வாத்து உள்ளிட்டவை வாங்க ஆர்வம் காட்டினர். கிராமங்களில் ஆடி பிறப்பு விசேஷமாக கொண்டாடப்படும், ஆடியில் தொடங்கும் அனைத்து செயல்களும் இருமடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. நேற்று திருப்புவனத்தில் அதிகாலை ஐந்து மணி முதல் பத்து மணி வரை நடத்த கால்நடை சந்தையில் வீடுகளில் வளர்ப்பதற்கு ஆடு, கோழி, வாத்து, கின்னி கோழி உள்ளிட்டவைகளை வாங்க ஆர்வம் காட்டினர்.ஒரு ஜோடி (ஆண், பெண் ) வாத்துகள் இரண்டாயிரத்து 500 ரூபாய் வரையிலும் கின்னிகோழி ஜோடி ஆயிரத்து 400 ரூபாய் என்றும் சண்டை சேவல் குஞ்சுகள் இரண்டாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டன. ஆட்டுகுட்டிகள் இறைச்சிக்காக பத்து கிலோ எடை கொண்ட குட்டிகள் எட்டாயிரம் ரூபாயில் இருந்து அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் வரை விற்பனையானது.நேற்றைய சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடு, கோழி, வாத்துகள் விற்பனை செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை