கல்லல் சவுந்திர நாயகி சோமசுந்தரேஸ்வர் கோயிலில் மாசி மக திருவிழா துவக்கம் மார்ச் 11 ல் தேரோட்டம்
சிவகங்கை: கல்லல் சவுந்திர நாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா முக்கிய நிகழ்வாக மார்ச் 11 ம் தேதி மாலை 4:33 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கல்லல் சவுந்திரநாயகி சமேத சோமசுந்தரேஸ்வரர் கோயிலில் மாசி மக திருவிழா மார்ச் 3 ம் தேதி கொடியேற்த்துடன் துவங்கியது.அன்று இரவு 9:00 மணிக்கு காப்பு கட்டுதலும், இரவு சுவாமி புறப்பாடும் நடந்தது. திருவிழாவை முன்னிட்டு தினமும் காலை சுவாமி புறப்பாடு, இரவு 9:00 மணிக்கு சுவாமி பூத, சிம்ம, கைலாச, காமதேனு, கற்பக விருட்சம், குதிரை, காளை வாகனங்களில் திருவீதி உலா நடந்தது. விழாவின் 9 ம் நாளான மார்ச் 11 ம் தேதி காலை 8:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி, அம்பாளுடன் எழுந்தருள்வார். சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெறும். அன்று மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் நடைபெறும். மார்ச் 12 அன்று காலை 11:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 8:30 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன் மாசி திருவிழா நிறைவு பெறும்.ஏற்பாட்டை கோயில் கண்காணிப்பாளர் பாலசரவணன், கோயில் பொறுப்பாளர் தண்ணீர்மலை, பூஜைகளை கோவில் ஸ்தானிகர்கள் சதாசிவம், கணேஷ் குருக்கள் செய்து வருகின்றனர்.