உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா

காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டி காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோயில் ஆடித்திருவிழா துவங்கியது. திருவிழாவையொட்டி நேற்று காலை 10:45 மணிக்கு அம்பாளுக்கு காப்பு கட்டப்பட்டு கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.இரவு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். ஜூலை 29ம் தேதி ஊஞ்சல் தரிசனம்,ஆக.1ம் தேதி பால்குடம், பூத்தட்டு ஊர்வலம், ஆக.2ம் தேதி திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. ஆடி 18ம் நாளான ஆக.3ம் தேதி சிறப்பு வழிபாடு,அன்னதானம் நடக்கிறது.ஏற்பாடுகளை வேட்டையன்பட்டி விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் மற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.சிறப்பு பூஜைகளை கோயில் சிவாச்சாரியார் பிரசன்னகுமார் செய்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை