உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோட்டையம்மன் கோயில் விழா ஜூலை 22ல் துவக்கம்

கோட்டையம்மன் கோயில் விழா ஜூலை 22ல் துவக்கம்

தேவகோட்டை : தேவகோட்டை கோட்டையம்மன் கோயில் ஆடிபொங்கல் விழா வரும் 22 ம்தேதி மாலை 6:00 மணிக்கு மேடை போடுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து மறுநாள் 23ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு முதல் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை நடக்க உள்ளது. தினமும் காலை மாலை பீடத்திற்கு அபிஷேகம் பூஜை நடைபெறும். 26ந்தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து காலை பால்குடமும், மாலை பூத்தட்டு ஊர்வலம் அதனைத் தொடர்ந்து பூச்சொரிதல் பூஜையும் நடக்கிறது. ஜூலை 30ந்தேதி பக்தர்கள் பொங்கலிட்டும், மாவிளக்கு ஏற்றியும் அம்மனை வழிபடுவர். ஆக. 4ந்தேதி மூன்றாவது பொங்கல் வைக்கப்பட்டு மறுநாள் 5ந்தேதி சிறப்பு பூஜைகளுக்குப் பின் அம்மனை நீரில் வைத்தல் வைபவம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்