உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டாக்டர்களுக்கு பாராட்டு

டாக்டர்களுக்கு பாராட்டு

சிங்கம்புணரி,: சிங்கம்புணரியை சேர்ந்த டாக்டர்கள், மருத்துவ மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு சேவுகா அரிமா சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவிற்கு சங்கத் தலைவர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.எஸ்.எஸ்.கல்லுாரி தாளாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தார். பட்டய தலைவர் ராஜமூர்த்தி வரவேற்றார். அரிமா சங்க ஆளுநர் சண்முகசுந்தரம் பேசினார். சிங்கம்புணரி பகுதியைச் சார்ந்த அரசு, தனியார் டாக்டர்கள், மருத்துவக் கல்வி மாணவர்கள் 60 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மண்டல தலைவர் விஜயகுமார், வட்டாரத் தலைவர் அண்ணாதுரை, டாக்டர் மீனாட்சி சுந்தரம், செயலாளர் செல்வசேகரன், பொருளாளர் முருகேசன், கருணாநிதி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை