உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் தி.மு.க., சேர்மனுக்கு எதிராக கவுன்சிலர்கள் ↓நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக எச்சரிக்கை

காரைக்குடியில் தி.மு.க., சேர்மனுக்கு எதிராக கவுன்சிலர்கள் ↓நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதாக எச்சரிக்கை

காரைக்குடி நகராட்சி கூட்டம் நேற்று சேர்மன் முத்துதுரை தலைமையில் நடந்தது. துணைச் சேர்மன்குணசேகரன், ஆணையாளர் வீரமுத்துக்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் நிலவும் குறை குறித்தும் நடந்து முடிந்த பணிகள் குறித்தும் பேசினர். சில அ.தி.மு.க., தி.மு.க., கவுன்சிலர்களுக்கு பேச வாய்ப்பளிக்கவில்லை என்று கூறிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டம் முடிக்கப்பட்டது. கோபமடைந்த அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் சிலர் சேர்மன் முத்துத்துரை மீது புகார் எழுப்பினர்.சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வரி உயர்வு தீர்மானம் குறித்து பேச அனுமதி மறுத்ததால் 11 வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் மெய்யர், எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தார்.கூட்டத்திற்கு பின் வெளியே வந்த 23 வார்டு தி.மு.க., கவுன்சிலர் சத்தியா கூறுகையில், எங்கள் கோரிக்கை குறித்து பேச வாய்ப்பு வழங்கவில்லை. பாதியிலேயே தேசிய கீதம் இசைக்க விட்டு கூட்டத்தை முடித்து விட்டனர்.டெண்டர் குறித்து எந்த முன் அறிவிப்பும் தருவதில்லை. தி.மு.க., உட்பட எந்த கட்சி கவுன்சிலர்களுக்கும் பேச வாய்ப்பளிப்பதில்லை. தி.மு.க., ஆட்சிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் தான் அவப்பெயர் ஏற்படுகிறது. எந்த பணிகளையும் விரைவாக முடிப்பதில்லை. அவர்கள் கூறும் ஆட்களுக்கு, தான் பணி உடனடியாக நடக்கிறது. ஒருதலைப் பட்சமாக செயல்படும் சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம் என்றார். 27 வது வார்டு பிரகாஷ், அ.தி.மு.க., கூறுகையில், அ.தி.மு.க., கவுன்சிலர்களை பேச அனுமதிக்கவில்லை. மாநகராட்சி ஆவதற்கு முன்பே, வியாபாரிகளுக்கு வரி உயர்வு என்று நோட்டீஸ் வந்துஉள்ளது.இப்போதே இந்த உயர்வு என்றால், ஏழை எளிய மக்கள் வியாபாரிகளின் நிலை என்ன என்று கவலை எழுந்துள்ளது.பல நுாறு ஆண்டுகளாக அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும் மகர் நோன்பு பொட்டலில், கழிப்பறை கட்டுவதை வன்மையாக கண்டிக்கிறோம்.29வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் அமுதா கூறுகையில், மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்தெடுக்க டெண்டர் விடப்பட்டுஉள்ளது. தினந்தோறும் 48 டன் குப்பை சேகரிக்கப்படுவதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.குப்பை கழிவில் இருந்து தயாரிக்கப்படும் எளிதில் தீப்பற்றும் எரிபொருளை சிமென்ட் ஆலைக்கு தினமும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்காணிக்க அதிகாரிகள் இருக்கின்றார்களா என்று கேட்டதற்கு பதில் இல்லை. ஆறு மாதத்திற்கு ஒருமுறை குப்பைகளை பிரிக்க டெண்டர் விடுகின்றனர். இதன் மூலம் இதுவரை ரூ. 4 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுஉள்ளது. இதில், ஈடுபட்டுள்ள இரு நிறுவனங்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு செயல்படுகின்றனவா என்று தெரியவில்லை. தனியார் இடத்தில் குப்பை கொட்டப்படுகிறது. சேர்மன் முத்துத்துரை கூறுகையில், கூட்டத்தில்70 சதவீதம் பேசுவதற்குவாய்ப்பு அளிக்கப்படுகிறது. சிலர் பொது பிரச்னையை பேசாமல்அவர்களது சொந்த பிரச்னை குறித்து பேசுகின்றனர். தி.மு.க.,கவுன்சிலர்கள் சிலர் ஹோட்டல் மற்றும் திருவிழா காலங்களில், போடப்படும் சாலையோர கடைகளில் பணம் வசூலிக்கின்றனர்.இதுபோன்று வசூலித்தால் அனைவருக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்று தெரிவித்ததால் தான் தொடர்ந்து அவதுாறு தெரிவிக்கின்றனர்.அ.தி.மு.க., கவுன்சிலர் அமுதா நகராட்சியில் பணிகள் செய்யவிடாமல் தடுக்கிறார். பிற அ.தி.மு.க., கவுன்சிலர்களால் எந்த பிரச்னையும் இல்லை.நடைபாதை வியாபாரிகளிடம் அதிக வசூல் செய்வதாக எழுந்த புகாரின் பேரில், விசாரணை நடத்துவதற்கு தற்போது கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. குப்பை பிரித்தெடுப்பதில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. முறையாக கணக்குகள் பராமரிக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை