| ADDED : ஜூன் 13, 2024 05:52 AM
சிவகங்கை: காளையார்கோவில் ஸ்டேஷனில் போலீசார் பற்றாக்குறையாக இருப்பதால் ரோந்து செல்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டத்திலுள்ள பெரிய தாலுகா காளையார்கோவில். இங்குள்ள போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் 266 கிராமங்கள் உள்ளன. போலீசார் இரவில் ரோந்து செல்ல வேண்டும் என்றால் 30 கி.மீ., பயணிக்க வேண்டும். ஸ்டேஷனில் 90 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 48 பேர் தான் பணிபுரிகின்றனர். இதில் சிலர் மாற்று பணியாக எஸ்.பி., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிகின்றனர். இதனால் இரவில் ரோந்து செல்வதில் சிரமம் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர் போக்குவரத்து போலீஸ்
சிவகங்கை - தொண்டி, பரமக்குடி - தஞ்சாவூர் ரோடு சந்திக்கும் முக்கிய நகர் காளையார்கோவில். இந்த ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். அனைத்து பஸ் போக்குவரத்தும் காளையார்கோவிலை மையமாக வைத்தே நடக்கிறது. வெளியூர்களில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் டூவீலரில் காளையார்கோவில் வந்து அங்கிருந்து பஸ்களில் தேவகோட்டை, கல்லல், காரைக்குடி, சிவகங்கை செல்கின்றனர்.டூவீலர்,கார்களின் எண்ணிக்கையும் இங்கு அதிகரித்து விட்டது. இதன் காரணமாக போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்,கல்லல் ரோடு விலக்கு,பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் காலை, மாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது.வாகன நெரிசலை கட்டுப்படுத்த காளையார்கோவிலில் போக்குவரத்து காவல் நிலையம் அமைத்து தினமும் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.மறவமங்கலத்தில் போலீஸ் ஸ்டேஷன்காளையார்கோவில் போலீஸ் ஸ்டேஷன் கட்டுபாட்டில் இருக்கும் மறவமங்கலம் இரண்டாவது பெரிய கிராமம். இந்த கிராமத்தை மையமாக கொண்டு 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்குள்ள மக்கள் தினசரி புகார் செய்ய காளையார்கோவிலுக்கு வருவதில் சிரமம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மறவமங்கலத்தில் நிரந்தர போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.