உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிடப்பில் போடப்பட்ட குழாய் பதிக்கும் பணி

கிடப்பில் போடப்பட்ட குழாய் பதிக்கும் பணி

திருப்புவனம்: திருப்புவனத்தில் குழாய் பதிக்கும் பணிக்காக தெருக்களை தோண்டி விட்டு அப்படியே கிடப்பில் போட்டு விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்புவனத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.வைகை ஆற்றில் திறந்த வெளி கிணறு, ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு நகர்ப்பகுதியில் மூன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது. ஜல்ஜீவன் திட்டம் மூலம் வீடுகள்தோறும் குடிநீர் வழங்க நகரின் பல்வேறு பகுதிகளில் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. நன்றாக உள்ள சிமென்ட், பேவர் பிளாக் ரோடு உள்ளிட்டவற்றை பெயர்த்து எடுத்து குடிநீர் குழாய் பதிக்கப்படுகிறது. பணிகளை முறையாக நிறைவேற்றாமல் குழாய் பதிக்க ஒரு முறையும் அதன்பின் 20 நாட்கள் கழித்து இணைப்பு வழங்க ஒரு முறையும் தெருக்களை இயந்திரம் மூலம் தோண்டுகின்றனர். பணிகளை முடித்த பின் மீண்டும் தெருக்களை சரி செய்யாமல் அப்படியே போட்டு விடுகின்றனர். ஒவ்வொரு தெருக்களிலும் 100 முதல் 150 வீடுகள் வரை உள்ள நிலையில் தெருக்கள் முழுவதும் மேடு பள்ளங்களாக கற்கள் பெயர்ந்து கிடப்பதால் நடந்து கூட செல்ல முடிவதில்லை. அவசரத்திற்கு ஆட்டோ உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியவில்லை. டூவீலர்களிலும் தடுமாறியபடியே செல்ல வேண்டியுள்ளது. இந்திராநகர் பகுதியில் குழாய் பதித்து 20 நாட்களாகியும் இன்று வரை இணைப்பு வழங்காமல் அப்படியே போட்டு வைத்துள்ளனர். திருப்புவனம் ரயில் நிலையத்திற்கு செல்லும் பிரதான தெரு இது தான், குண்டும் குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகி வருகின்றனர். குடிநீர் குழாயை சாக்கடையின் நடுவே பதித்திருப்பதால் மழை காலங்களில் குப்பை அடித்து வரப்பட்டு சாக்கடை அடைபட்டு மழை நீர், சாக்கடை நீர் முழுவதும் வெளியேறி துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் நிலவி வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை