உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வக்கீல்கள் போராட்டம்

வக்கீல்கள் போராட்டம்

சிவகங்கை: சென்னை திருவான்மியூர் அவ்வை நகர் பகுதியை சேர்ந்த வக்கீல் கவுதம். திருவள்ளூர் சாலையில் வியாழன் இரவு சென்றார். அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி விட்டு தப்பியது. படுகாயமடைந்த கவுதமை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கவுதம் உயிரிழந்தார். வக்கீல்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகங்கையில் வக்கீல்கள் சங்கத்தலைவர் ஜானகிராமன், இளையான்குடி சங்கத்தலைவர் கல்யாணி, காரைக்குடியில் சங்கத்தலைவர் சேதுராமன், திருப்புத்துாரில் சங்கத்தலைவர் ராஜ்மோகன், சிங்கம்புணரியில் சங்கத்தலைவர் ரமேஷ், தேவகோட்டையில் சங்கத்தலைவர் ஆண்டவர், மானாமதுரையில் சங்கத்தலைவர் பாலமுருகன், திருப்புவனம் சங்கத்தலைவர் சேதுராமச்சந்திரன் தலைமையில்போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ