உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குறைந்தழுத்த மின் சப்ளை

குறைந்தழுத்த மின் சப்ளை

சிவகங்கை : மதகுபட்டி ஊராட்சி, சொக்கலிங்கபுரத்தில் குறைந்த மின் அழுத்த பிரச்னையால் மின்சாதனங்கள் சேதமாவதாக புகார் எழுந்துள்ளது.மதகுபட்டி ஊராட்சி, பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள சொக்கலிங்கபுரம், விரிவாக்க பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு சிவன் கோயில் அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் வினியோகம் நடக்கிறது. இந்த டிரான்ஸ்பார்மரை அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் சீரமைப்பது இல்லை.இதனால், பழுதடைந்த நிலையில் இந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து தான், வீடுகளுக்கு குறைந்த மின் அழுத்த பிரச்னையுடன் மின் சப்ளை நடக்கிறது. சிறு மழை பெய்தால் கூட டிரான்ஸ்பார்மர் செயல் இழந்து, மின்வெட்டு நேரிடும். குறைந்த மின் அழுத்த பிரச்னையால், அடிக்கடி வீடுகளில் உள்ள மின் சாதனங்கள் பழுதாகி விடுகின்றன.மேலும், விரிவாக்க பகுதிகளிலும் கூடுதலாக வீடுகள் கட்டி குடியேறி வருகின்றனர். அதற்கேற்ப டிரான்ஸ்பார்மர் அமைக்காமல், பழைய டிரான்ஸ்பார்மரில் இருந்து தான் விரிவாக்க பகுதி வீடுகளுக்கும் மின்சப்ளை செய்கின்றனர்.இதனால், டிரான்ஸ்பார்மர் அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இது போன்ற மின் பிரச்னையால், மின்சாதனங்கள் பழுதாவதை தவிர்க்க, கூடுதலாக ஒரு டிரான்ஸ்பார்மர் பொருத்தி, தடையில்லா மின்சப்ளை செய்ய வேண்டும் என நேற்று நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மக்கள் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை