உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தி.வைரவன்பட்டியில் மகா பைரவர் ஹோமம்

தி.வைரவன்பட்டியில் மகா பைரவர் ஹோமம்

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அருகே திருவைரவன்பட்டி மெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு மகா பைரவர் ஹோமம் நடந்தது.சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பைரவர் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். மூலபாலகால பைரவர் என்றழைக்கப்படும் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று இரவில் மகா பைரவர் ஹோமம் நடத்தப்படும். நேற்று முன் தினம் மூலவர் பைரவர் தங்கக் கவசத்தில் அருள்பாலித்தார். இரவு 7:00 மணிக்கு சிவாச்சார்யர்களால் மகா கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கின.தொடர்ந்து பூர்ணாகுதி தீபாராதனை, மகாபைரவர் ேஹாமம், கோ பூஜை நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, நெய், வஸ்திரம், மற்றும் புஷ்பயாகம் நடந்து மகாபூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் கலசங்கள் புறப்பாடாகி மூலவருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் பைரவருக்கு அலங்காரத் தீபாராதனை நடந்தன. பெண்கள் பங்கேற்று சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பைரவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்