உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தரியம்பட்டியில் மஞ்சுவிரட்டு

தரியம்பட்டியில் மஞ்சுவிரட்டு

திருக்கோஷ்டியூர்: திருப்புத்துார் ஒன்றியம் தரியம்பட்டி கோயில் வருடாபிேஷகத்தை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது.திருக்கோஷ்டியூர் ஊராட்சி தரியம்பட்டியில் வழிவிடும் விநாயகர், வடக்கு வாசல் செல்வி அம்பாள், கருப்பர் கோயிலின் மூன்றாம் ஆண்டு வருடாபிேஷகம் நடந்தது. அதை முன்னிட்டு நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. கிராமத்தினர் கோயில்களில் வழிபாடு நடத்திவிட்டு, மேளதாளத்துடன் ஊர்வலமாக தொழுவிற்கு வந்து பூஜை செய்தனர்.தொடர்ந்து முதலாவதாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. பின்னர் தொழுவிலிருந்து 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி மாவட்டத்திலிருந்து வந்த காளைகள் பங்கேற்றன.மேலும் வயல்களிலும் கட்டுமாடுகள் அவிழ்க்கப்பட்டன. காளைகள் முட்டியதில் சிலர் காயமடைந்தனர். அனுமதியில்லாத மஞ்சுவிரட்டு என்பதால் திருக்கோஷ்டியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி