உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் கடைகளில் விரல் ரேகைபதிய மார்ச் 15 கடைசி நாள்

ரேஷன் கடைகளில் விரல் ரேகைபதிய மார்ச் 15 கடைசி நாள்

சிவகங்கை: ரேஷன்கடைகளில் அந்தியோதயா அன்ன யோஜனா, முன்னுரிமை கார்டுதாரர், உறுப்பினர் கைரேகையை மார்ச் 15 க்குள் வைக்க வேண்டும் என கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் அந்தியோதயா அன்ன யோஜனா (ஏ.ஏ.ஒய்) கார்டுகள் 46,339 உள்ளன. இக்குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 432. இதில், 1 லட்சத்து 21 ஆயிரத்து 924 உறுப்பினர்கள் விரல் ரேகை மட்டுமே பதிவு செய்துள்ளனர். அதே போன்று முன்னுரிமை உள்ள (பி.எச்.எச்.,) கார்டுகள் 1 லட்சத்து 91 ஆயிரத்து 710 ல் 6 லட்சத்து 14 ஆயிரத்து 816 உறுப்பினர் உள்ளனர். இதில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 199 பேர் மட்டுமே விரல் ரேகையை பதிவு செய்துள்ளனர். இவ்விரு பிரிவு கார்டுகளின் குடும்ப உறுப்பினர்களில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 125 பேரின் விரல் ரேகை பதிவு செய்யவில்லை. தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் இவ்விரு ரேஷன் கார்டுகளின் குடும்ப உறுப்பினர்கள் மார்ச் 15 க்குள் அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது விரல் ரேகைகளை பதிவு செய்து கொள்ள வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ