உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிறுமிக்கு திருமணம்; 4 பேர் மீது வழக்கு

சிறுமிக்கு திருமணம்; 4 பேர் மீது வழக்கு

சிவகங்கை : சிவகங்கை அருகே அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 முடித்தவர் 17 வயது சிறுமி. கடந்த 9ம் தேதி அவரது வீட்டில்வைத்து திருப்புத்துார் அருகே நயினாபட்டி ராசு மகன் சதீஷ்குமாருக்கு 31, திருமணம் முடித்து கொடுத்துள்ளனர்.சிறுமியின் தாய் 39, சதீஷ்குமாரின் தந்தை 60, அவரது தாய் 35, ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். மாவட்ட சமூக நலத்துறைக்கு புகார் சென்றது. சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் புஷ்பகலா சிவகங்கை மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, எஸ்.ஐ., மருதீஸ்வரி ஆகியோர் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ