உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / என். புதுார் மஞ்சுவிரட்டு 28 பேர் காயம்

என். புதுார் மஞ்சுவிரட்டு 28 பேர் காயம்

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே என்.புதுார் வெள்ளாளக்கருப்பர் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மாடு முட்டியதில் 28 பேர் காயமடைந்தனர்.இக்கிராமத்தினர் ஆண்டு தோறும் மாசி கடைசி வெள்ளிக்கிழமை வெள்ளாளக்கருப்பர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம்.கிராமத்தினர் கோயிலில் வழிபாடு நடத்திய பின்னர் சாமியாடிகள், கோயில் காளைகளுடன் கிராமத்தினர் ஊர்வலமாக மஞ்சுவிரட்டு தொழுவிற்கு வந்தனர். தொழுவிலிருந்து முதலில் கோயில் காளை அவிழ்க்கப்பட்டது. தொழுவுக்கு வந்த 202 காளைகளில் கால்நடைத்தறையினரால் 17 காளைகள் நிராகரிக்கப்பட்டது. மாடு பிடிவீரர்கள் 50 பேர் இரு சுற்றுக்களாக பங்கேற்றனர்.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. காலை முதல் தொழுவிற்கு அருகாமையில் கட்டுமாடுகள் அவிழ்க்கப்பட்டன.மாடு முட்டியதில் பலர் காயமடைந்தனர். 300க்கும் மேற்பட்ட காளைகள் கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டது.மாடு முட்டியதில் மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் 28 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ