சிவகங்கையில் மார்ச் 8ல் தேசிய மக்கள் நீதிமன்றம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 8 அன்று காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது.சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.11 அமர்வுகளில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உதவியுடன் வழக்குகளில் சமரச முடிவுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது.இதில் மோட்டார் வாகன விபத்து நஷ்டஈடு வழக்கு, காசோலை மோசடி வழக்கு, உரிமையியல் வழக்கு, குடும்ப பிரச்னை குறித்த வழக்கு, தொழிலாளர் பிரச்னை குறித்த வழக்கு, சமரச குற்ற வழக்கு குறித்து தீர்வு காணலாம்.தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு செய்ய இயலாது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை விரைவாக தீர்வு கண்டு பயன்பெறலாம்.