உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம் /

புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம் /

சிங்கம்புணரி : கள்ளக்குறிச்சியில் 59 பேர் பலியாக காரணமான கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத்தவறிய தி.மு.க., அரசு நிர்வாகத்தை கண்டித்து சிங்கம்புணரியில் புதிய தமிழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் மலைராஜ் முன்னிலை வகித்தார். ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும், பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி