உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுந்தரநடப்பில் சாலை வசதி இல்லை: நோயாளிகளை துாக்கிச் செல்லும் அவலம்

சுந்தரநடப்பில் சாலை வசதி இல்லை: நோயாளிகளை துாக்கிச் செல்லும் அவலம்

சிவகங்கை : சிவகங்கை அருகே சுந்தரநடப்பு கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் நோயாளிகளை துாக்கி வரும் அவலம் நீடித்து வருகிறது. சிவகங்கை அருகே உள்ளது சுந்தரநடப்பு கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெரிய கோட்டை விலக்கு ஒத்த வீடு தெருவில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு முறையான சாலை வசதி கிடையாது. இந்த பகுதியில் மழை பெய்தால் குண்டும் குழியுமாக சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. நேற்று இந்த பகுதியில் உடல்நிலை சரியில்லாத ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வந்த 108 ஆம்புலன்ஸ் பாதை சரி இல்லாத காரணத்தினால் அவரது வீட்டிற்கு அருகே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அவரை ஸ்டிரெச்சரில் துாக்கி சென்று ஆம்புலன்ஸ் ஏற்றும் சூழல் ஏற்பட்டது. முறையான சாலை வசதி இல்லாததால் ஒவ்வொரு முறையும் இதே சூழல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் சுந்தரநடப்பு கிராமத்தில் உள்ள ஒத்த வீடு பகுதிக்கு முறையான சாலை வசதிய அமைத்து கொடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ