உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பாடத்திட்டம், பாடப் புத்தகம் இல்லை உடற்கல்வி தேர்வால் தவித்த மாணவர்கள்

பாடத்திட்டம், பாடப் புத்தகம் இல்லை உடற்கல்வி தேர்வால் தவித்த மாணவர்கள்

காரைக்குடி : தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத நிலையே நிலவுகிறது. ஆசிரியர்கள் இல்லாத நிலையில் உடற்கல்விக்கென எந்த பாடத்திட்டமும் பாடப்புத்தகமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடுநிலைப் பள்ளிகளுக்கு நடந்த உடற்கல்வி தேர்வில் வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படாததால் நேற்றுமுன்தினம் வினாத்தாளை பார்த்த மாணவர்கள் குழப்பத்திலேயே தேர்வு எழுதினர்.விளையாட்டுத் துறையில் ஆர்வமுள்ள மாணவர்கள் பிற்காலத்தில் விளையாட்டு துறையில் ஜொலிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆசிரியரும் இல்லாமல் பாடப்புத்தகமும் இல்லாமல் பாடத்திட்டமும் இல்லாமல் வினாத்தாளை மட்டும் கொடுத்து மாணவர்களை தேர்வு எழுத வைப்பது மாணவர்களையும் பெற்றோர்களையும் குழப்பம் அடைய செய்துள்ளது. இனி வரும் காலங்களிலாவது முறையாக உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து, பாடத்திட்டங்களை வழங்கி தேர்வு நடத்த வேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ