உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மிளகனுார் முதல் கொம்புகாரனேந்தல் ரோட்டில் கருவேல மரங்களால் அச்சம்

மிளகனுார் முதல் கொம்புகாரனேந்தல் ரோட்டில் கருவேல மரங்களால் அச்சம்

மானாமதுரை : மானாமதுரை அருகே மிளகனூரிலிருந்து கொம்புக்காரனேந்தல் செல்லும் ரோட்டை மறைக்கும் அளவிற்கு கருவேல மரங்கள் வளர்ந்திருப்பதினால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை அருகே உள்ள மிளகனூரிலிருந்து சீனிமடை வழியாக கொம்புக்காரனேந்தல், கட்டிக்குளம் செல்லும் ரோட்டின் இருபுறமும் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்திருப்பதினால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலும் கட்டிகுளத்திலிருந்து புதுக்குளம், விளத்துார் செல்லும் ரோட்டின் இருபுறங்களிலும் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால் வாகனஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இரவில் கருவேல மரங்கள் குத்தி ஏராளமானோர் காயமடைகின்றனர்.இது குறித்து கிராம மக்கள் பி.டி.ஓ., நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ