உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜூலை 18ல் மக்களுடன் முதல்வர் முகாம் 

ஜூலை 18ல் மக்களுடன் முதல்வர் முகாம் 

சிவகங்கை : சிவகங்கை, சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் ஜூலை 18 அன்று 'மக்களுடன் முதல்வர்' திட்ட முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒக்கூர், கீழ, மேலப்பூங்குடி, பிரவலுார், ஒ.புதுார் ஆகிய கிராமங்களுக்கு ஒக்கூர் கண்ணாத்தாள் திருமண மண்டபத்திலும், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரசேகரபுரம், பிரம்பு வயல், பெரிய கொட்டகுடி, ஆம்பக்குடி, செங்காந்தன்குடி ஆகிய கிராமங்களுக்கு மேலமணக்குடி நாச்சியார் திருமண மகாலில் ஜூலை 18 அன்று காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை முகாம் நடைபெறும்.இம்முகாமில் பொதுமக்கள் மனுக்கள் அளிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை