டூவீலர் விபத்தில் ஒருவர் பலி
சிவகங்கை, : சிவகங்கை அருகே சக்கந்தியை சேர்ந்தவர் கண்ணன் 56. இவர் நேற்று அதிகாலை 5:15 மணியளவில் ஊத்திகுளத்தில் உள்ள மகள் வீட்டில் இருந்து சொந்த ஊரான சக்கந்திக்கு சைக்கிளில் இளையான்குடி ரோட்டில் சென்றார். கூத்தாண்டம் அருகே சென்றபோது நாய் குறுக்கே சென்றது.இதனால் தடுமாறியதில் பின்னால் வந்த டூவீலர் மோதியதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் பலியானார். டூவீலரில் வந்த உடைகுளத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் காயம் அடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரியில் சிகிச்சை பெற்று வருகின்றார். சிவகங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.