உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உறுப்பு தான விழிப்புணர்வு

உறுப்பு தான விழிப்புணர்வு

சிவகங்கை : சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உறுப்பு தான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.அனைத்து தபால் நிலையங்களில் உறுப்பு தான விழிப்புணர்வு மாதம் கடைபிடிக்கப்படுகிறது. சிவகங்கை தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிகாரிகள், ஊழியர்களுக்கு மனித உறுப்புகளின் முக்கியத்துவம், எவ்வளவு மணி நேரத்திற்குள் எந்தெந்த உறுப்புகளை தானமாக வழங்க வேண்டும். உறுப்பு தான திட்டம் மூலம் மனித உயிர்கள் மறுபிறவி எடுப்பது குறித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மயக்கவியல் துறை டாக்டர் கோகுல்தாஸ் விளக்கம் அளித்தார். மேலும், உறுப்பு தானம் செய்ய வேண்டியதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். நிகழ்ச்சிக்கு தபால் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) வி.தீத்தாரப்பன் தலைமை வகித்தார். உதவி கோட்ட கண்காணிப்பாளர் எம். சித்ரா முன்னிலை வகித்தார். தபால் அலுவலக அலுவலர்கள்,ஊழியர்கள், தபால்காரர்கள் பங்கேற்றனர். கோட்ட ஆய்வாளர் போற்றிராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை